உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கலான் படத்தோடு வெளியாகும் கங்குவா டீசர்

தங்கலான் படத்தோடு வெளியாகும் கங்குவா டீசர்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடல் சூர்யா பிறந்தநாளில் வெளியான நிலையில் அடுத்து இப்படத்தின் டீசர் அல்லது டிரைலரை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். குறிப்பாக கங்குவா படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜாவே, விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தையும் தயாரித்திருப்பதால், ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் தங்கலான் படத்துடன் கங்குவா டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தங்கலான் படத்தின் இடைவெளியின் போது கங்குவா டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !