ஜமா படத்தின் டிரைலர் வெளியானது
பாரி இளவழகன் என்பவர் இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் படம் ஜமா. அம்மு அபிராமி நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த டிரைலரில், பெண்மை தன்மை உடன் இருக்கும் நாயகனுக்கு யாரும் பெண் கொடுக்க மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கும் அம்மு அபிராமிக்கு இடையே காதல் உருவாகிறது. இதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள், மோதல்தான் இந்த படத்தின் கதை என்பது அந்த டிரைலரை பார்க்கும்போது தெரியவருகிறது. இப்படத்தில் பாரி இளவழகன் அம்மு அபிராமி உடன் சேத்தன், மணிமேகலை, வசந்த மாரிமுத்து, சாரதி கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குறிப்பாக இளையராஜா இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இசையமைத்திருக்கிறார். இந்த ஜமா படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வருகிறது.