உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை : நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது

தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை : நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது

கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம் அடங்கிய கூட்டுகுழு கூட்டத்தில் அதிரடியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக நடிகர்கள் விஷால், தனுஷ் ஆகியோருக்கு கட்டுப்பாடு விதிப்பது மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 4ம் தேதி கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் நாசர் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷ் மீது விதித்துள்ள தடை மற்றும் கூட்டுகுழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விவாதித்து அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !