சர்தார் 2ம் பாகத்தில் இணைந்த மாளவிகா மோகனன்
ADDED : 474 days ago
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதில் கார்த்தியே ஹீரோவாக நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தை பூஜையுடன் அறிவித்தனர். சென்னையில் இதன் படப்பிடிப்பும் தொடங்கியது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் ஒருவர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். தொடர்ந்து இப்போது இதில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
தமிழில் விஜய், தனுஷ், விக்ரம் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்தது தொடர்ந்து தற்போது கார்த்தி உடன் இணைந்து நடிக்கின்றார் மாளவிகா மோகனன்.