ராயன் படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் அங்கீகாரம்
ADDED : 429 days ago
தனுஷ் இயக்கி, நடித்து திரைக்கு வந்திருக்கும் அவரது 50வது படம் ராயன். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் ஆறே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, தமிழ் சினிமா வரலாற்றில் ஏ சான்றிதழ் பெற்று 100 கோடி வசூல் செய்த முதல் படம் இது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு இன்னொரு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், இந்த படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம் பெற தேர்வாகியுள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் தனுஷின் ராயன் படத்திற்கு சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.