உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷிற்கு ஜோடியாக கிர்த்தி சனோன்

தனுஷிற்கு ஜோடியாக கிர்த்தி சனோன்

ராஞ்சனா, அட்ரங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க கிர்த்தி சனோன் உடன் ஆனந்த் எல். ராய் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். அவருக்கும் இதன் கதையும், அவரின் கதாபாத்திரமும் பிடித்து நடிக்க சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !