படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கு தலையில் காயம்
ADDED : 452 days ago
கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்தது. தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சண்டை காட்சியின் போது சூர்யாவுக்கு தலையில் சிறிதாக காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் சூர்யா. மருத்துவர் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுரைத்துள்ளனர்.