மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
393 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
393 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
393 days ago
நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாகத் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. இந்த வருடத்திய 8வது சீசன் நிகழ்ச்சியிலிருந்து 'பிரேக்' எடுத்துக் கொள்வதாக சில தினங்களுக்கு முன்பு அவர் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து அடுத்த தொகுப்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. ஏற்கெனவே 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற ஓடிடியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை சிலம்பரசன் தொகுத்து வழங்கியதால் அவர்தான் 8வது சீசனின் புதிய தொகுப்பாளராக வரலாம் என்ற தகவல் வெளியானது.
அதோடு ஏற்கெனவே டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதில் முன் அனுபவம் கொண்ட சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரது பெயர்களும் அடிபட்டன. சூர்யா 'சூர்யா 44, கங்குவா 2' ஆகிய படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடிக்க வேண்டி இருப்பதால் 'நோ' சொல்லிவிட்டாராம்.
இப்போதைய தகவலின்படி விஜய் சேதுபதி சம்மதம் சொல்லிவிட்டார் என்று டிவி வட்டாரங்களில் சொல்கிறார்கள். விரைவில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாம்.
சினிமா, வெப் சீரிஸ், டிவி தொகுப்பாளர் என அனைத்திலும் இமேஜ் பார்க்காமல் பயணிப்பவர் விஜய் சேதுபதி. மேலும், 'நம்ம ஊரு ஹீரோ, மாஸ்டர் செப் இந்தியா' ஆகிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. கமல்ஹாசன் அளவிற்கு 'கருத்தாக' பேசக் கூடியவர் என்ற இமேஜும் அவருக்கு இருக்கிறது. அதனால் அவர்தான் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று பிக் பாஸ் குழுவினர் முடிவெடுத்துவிட்டார்களாம்.
393 days ago
393 days ago
393 days ago