உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம்

தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம்


2025ம் ஆண்டு 275 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் 10 சதவீத படங்கள் கூட வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு சினிமா மோசம் என்கிறார்கள் பலரும். ஆனால், ஒரு சிலரோ 2025ம் ஆண்டு சினிமா ஓரளவு நன்றாக இருந்தது. அனைவரும் படத்தின் பிஸினஸ் பற்றி பேசும்போது தியேட்டர் வசூல், லாபத்தை மட்டுமே கணக்கு போடுகிறார்கள். கொரோனா காலகட்டத்துக்கு பின் சினிமா நிலவரம் மாறிவிட்டது.

தியேட்டர் பிஸினஸ் தவிர, ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ், வெளிமாநில, வெளிநாட்டு உரிமை, டப்பிங், ரீமேக் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என பல வகைகளில் வியாபாரம் நடக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு பல படங்களின் தயாரிப்பாளர்கள் தப்பித்தார்கள். பல தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்தார்கள். அதை யாரும் கணக்கில் கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள், நல்ல படத்தை எடுத்தவர்களுக்கு கவலை இல்லை என்கிறார்கள் கோலிவுட்டில். அப்படி பார்த்தால் வெற்றியின் சதவீதம் இன்னும் அதிகம்.

வருங்காலத்திலும் தியேட்டர் பிஸினஸ் குறைந்துவிடும். தியேட்டரை பொறுத்தவரையில் டிக்கெட்டை மட்டும் நம்பி இருப்பது இல்லை. கேண்டீன், பார்க்கிங், விளம்பர வழியாகவே பணம் அதிகமாக வருகிறது. அவர்களும் பார்வையாளர்கள், டிக்கெட் விற்பனை என்ற மனநிலையில் இருந்து மாறி, வேறு வருமானத்தில் கவனம் செலுத்துகிறார்கள். காலத்திற்கு ஏற்ப சினிமாவும் மாறிவிட்டது. 2025ம் ஆண்டை பொறுத்தவரையில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தவர்களை விட, ஓடிடியில், பைரசியில் கம்யூட்டரில், ஸ்மார்ட் போனில் படம் பார்த்தவர்களே அதிகம் என கணக்கும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !