உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாத்தாவாக போகும் மகிழ்ச்சியில் ரோபோ சங்கர்

தாத்தாவாக போகும் மகிழ்ச்சியில் ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா தமிழில் விஜய்யின் ‛பிகில்' படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கார்த்தியின் ‛விருமன்' படத்திலும் நடித்தார். சில மாதங்களுக்கு முன் கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர் தற்போது தனது கணவருடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அண்மையில் வெளியான எபிசோடின் புரொமோவில் இந்திரஜாவும் கார்த்திக்கும் தாங்கள் அப்பா அம்மா ஆவப்போவதாக சொல்ல நடுவர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறினர். இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த ரோபோ சங்கர் மிக இளவயதில் தாத்தாவான பிரபலம் நானாக தான் இருப்பேன் என்று எமோஷ்னலாக பேசினார். இதனையடுத்து அந்த தொலைக்காட்சியின் வழக்கமான டெம்பிளேட்டாக ஒரு மினி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !