உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்கும் பாரதிராஜா

முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்கும் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படங்களை கொடுத்தவர். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தனக்குள் இருக்கும் நடிகனுக்கு தீனி போடும் விதமாக தற்போது பிஸியான குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் என பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இடையில் அவ்வப்போது உடல்நிலை குறைவு ஏற்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன்முறையாக மலையாள படம் ஒன்றிலும் நடிக்கிறார் பாரதிராஜா. மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !