உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வயநாடு பாதிப்பு : கேரள முதல்வரிடம் 1 கோடி நிதி கொடுத்த மீனா, சுஹாசினி, குஷ்பூ!

வயநாடு பாதிப்பு : கேரள முதல்வரிடம் 1 கோடி நிதி கொடுத்த மீனா, சுஹாசினி, குஷ்பூ!

சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 350 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகைகளான மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி பிரியதர்ஷன் ஆகியோர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !