கோலி சோடா 3ம் பாகம் பஞ்சாயத்து தீர்ந்தது!
ADDED : 426 days ago
கோலி சோடா படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கியிருந்தார் விஜய் மில்டன். இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோலி சோடா மூன்றாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கி வந்தார்.
இதில் சேரன், ஷாம், புகழ், அவந்திகா, அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் பட வெளியீடு தள்ளிப் போனது. இப்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்து விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.