உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதிர் நடிக்கும் புதிய வெப் தொடர்!

கதிர் நடிக்கும் புதிய வெப் தொடர்!


நடிகர் கதிர் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுழல் வெப் தொடரில் நடித்திருந்தார். இது அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு வெப் தொடரில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கதிர். இந்த வெப் தொடரை லஷ்மி சரவண குமார் இயக்குகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது. இதற்கு 'லிங்கம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதிருடன் இணைந்து சத்யா, திவ்ய பாரதி, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !