வெப் தொடரில் அறிமுகமாகும் சூரி
ADDED : 466 days ago
நடிகர் சூரி நகைச்சுவை நடிகரில் இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ளார். விடுதலை, கருடன் என இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூரியின் கைவசமாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சூரி முதல்முறையாக வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடரில் சூரி கதை, எழுதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் மதுரையில் நடைபெறும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.