உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல்ஹாசனின் கலைப் பயணத்திற்கு வயது 65

கமல்ஹாசனின் கலைப் பயணத்திற்கு வயது 65

தமிழ் சினிமாவின் முக்கியக் கலைஞராக இருப்பவர் கமல்ஹாசன். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, பாடகர் என பன்முகத் திறமை கொண்ட ஒரு கலைஞராக கடந்த 64 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படம் வெளிவந்து இன்றுடன் 64 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குறிப்பிடத்தக்க சிறந்த படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கடந்த ஏழு சீசன்களாகப் பணியாற்றி டிவியிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.

மறக்க முடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தடுத்து சில படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

பல புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய சினிமாக் கலைஞர் என்ற பெருமை அவருக்குண்டு. அவருடைய இத்தனை ஆண்டு கால கலைப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !