மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
415 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
415 days ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக, வசூல் படங்களாக அமைந்தன.
2009ம் ஆண்டில் வெளிவந்த 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. 2022ம் ஆண்டில் வெளிவந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட குறைவாகவே வசூலித்தது. 2.3 பில்லியன் யுஎஸ் டாலர் தொகையை அது வசூலித்தது. இருந்தாலும் இரண்டு பாகங்களுமே பெரும் லாபத்தைக் கொடுத்த படங்கள்தான்.
இந்நிலையில் 'அவதார்' படத்தின் மூன்றாம் பாகம் 2017ம் ஆண்டிலேயே ஆரம்பமானது. அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதன் படப்பிடிப்பு நடந்தது. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது விஎப்எக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த வருடம் 2025 டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று(ஆக., 12) 'அவதார் 3'ம் பாகத்திற்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு 'அவதார் - பயர் அன்ட் ஆஷ்' என அறிவித்துள்ளார்கள். தமிழில் 'அவதார் - நெருப்பு மற்றும் சாம்பல்' என்று சொல்லலாம்.
அவதார் படம் 3ம் பாகத்தைத் தொடர்ந்து 4 மற்றும் 5ம் பாகங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. இதற்கான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன. ஆனாலும், 3ம் பாகம் வெளிவந்த பின்புதான் 'அவதார் 4' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர்வேன் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
415 days ago
415 days ago