உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் முதல் விஜய் 69 படப்பிடிப்பு?

அக்டோபர் முதல் விஜய் 69 படப்பிடிப்பு?

விஜய்யின் 68வது படமான 'தி கோட்' அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. தான் நடிக்கும் ஒரு படத்தை முடித்த பின் அடுத்த சில வாரங்களில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவார் விஜய். அவரது அடுத்த மற்றும் கடைசி படமான விஜய் 69 படம் பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால், படத்தைத் தயாரிக்கப் போவது இவர்கள்தான் என சில கம்பெனிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. எச்.வினோத் இப்படத்தை இயக்கப் போவது உறுதி என்று மட்டும் தகவல் வெளியானது. 'பிரேமலு' பட நாயகி மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கடந்த வாரம் தகவல்கள் வந்தது.

இந்நிலையில் 'தி கோட்' படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனாலும், படப்பிடிப்பை அக்டோபர் முதலே ஆரம்பித்துவிடலாம் என விஜய் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சீக்கிரம் படப்பிடிப்பை முடித்துவிட்டு 2026ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அவரது அரசியல் பயணத்தில் இறங்க உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !