ஆகஸ்ட் 23ம் தேதிக்கு தயாராகும் இரண்டு படங்கள்!
ADDED : 419 days ago
சுதந்திர தினத்தையொட்டி நேற்று தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியான நிலையில், தங்கலான், டிமான்டி காலனி -2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் 23ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛வாழை' மற்றும் கூழாங்கல் படத்தை இயக்கிய பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‛கொட்டுக்காளி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரப் போகின்றன. இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களுமே இதற்கு முன்பு தரமான படங்களை கொடுத்திருப்பதால் இந்த படங்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.