உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கலான் இரண்டாம் பாகம்- விக்ரம் வெளியிட்ட தகவல்!

தங்கலான் இரண்டாம் பாகம்- விக்ரம் வெளியிட்ட தகவல்!


பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்திற்கும் இந்த படம் முதல் நாளில் 26.44 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கூறுகையில், ‛‛தங்கலான் படத்தை 100 பாகங்கள் கூட எடுக்க முடியும். உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால் நீங்கள் காட்டும் அன்புக்காக இரண்டாம் பாகத்தை உருவாக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பற்றி இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரிடத்தில் கலந்து பேசி உள்ளேன். ரஞ்சித் தனது அடுத்த படவேலைகளை முடித்துவிட்டு தங்கலான்-2 படத்தில் நடிக்க அழைத்தால் உடனே சென்று விடுவேன்,'' என்று கூறியுள்ளார் விக்ரம். இதன் மூலம் தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !