திரைக்கு வந்து இரண்டே வாரத்தில் ஓடிடியில் ரிலீசான மழை பிடிக்காத மனிதன்!
ADDED : 433 days ago
தனுஷ் இயக்கி நடித்து திரைக்கு வந்த ராயன் படம் ஜூலை 26ம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் இப்படம் திரைக்கு வந்த நான்கு வாரங்களில் அதாவது ஆகஸ்ட் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விஜய் ஆண்டனி நடிப்பில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரைக்கு வந்த மழை பிடிக்காத மனிதன் என்ற படம் திரைக்கு வந்து இரண்டே வாரங்களில் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடி தளத்தில் இன்று முதல் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து தான் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும் என்ற விதிமுறை இருந்து வரும் நிலையில், மழை பிடிக்காத மனிதன் படம் இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரங்களில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.