பிரபாஸ் உடன் இணைந்த ‛சீதா ராமம்' இயக்குனர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ADDED : 676 days ago
தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது 'ராஜா சாப்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து 'சீதா ராமம்' படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இன்று பூஜை நிகழ்ச்சி உடன் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படம் 1940ம் ஆண்டில் நடைபெறும் கதையாக பீரியட் படமாக உருவாகிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதில் கதாநாயகியாக இமான்வி எனும் புதிய நடிகை நடிக்கிறார். இதற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.