அக்.4ல் துவங்கும் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு!
ADDED : 430 days ago
நடிகர் விஜய் தற்போது ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். 2026ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் இறங்குகிறார். இதனால் தற்காலிகமாக விஜய் தனது அடுத்த படமான 69வது படத்தை கடைசி படமாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தை எச்.வினோத் இயக்குவதாக அவரே உறுதி செய்தார். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற அக்டோபர் 4ம் தேதி அன்று தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.