சத்தமில்லாமல் நடைபெற்று வரும் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படப்பிடிப்பு!
ADDED : 456 days ago
ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1, 2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் ' டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. இதனை ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக சந்தானத்திற்கு அமைந்தது.
சமீபத்தில் மீண்டும் பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' 2ம் பாகம் உருவாகிறது. இதனை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார் என அறிவித்த பிறகு இது குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பை கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.