சூரியை சந்தித்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னட்
ADDED : 413 days ago
பிரபல சின்னத்திரை இயக்குநரான பிரவீன் பென்னட், ‛பாரதி கண்ணம்மா, ராஜா ராணி' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல திரைப்பட நடிகர் சூரியை சந்தித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எதாவது ப்ராஜெக்ட்டில் கமிட்டாகியிருக்கிறார்களா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
உண்மையில், சூரி தனது சொந்த ஊரான ராஜாகூர் ஊர் திருவிழாவை தானே முன்னெடுத்து அண்மையில் நடத்தினார். அந்த திருவிழாவில் திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற சூரி, அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது பிரவீன் பென்னட் குடும்பத்துடன் சூரி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.