மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
404 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
404 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
404 days ago
குரங்கு பொம்மை, மகாராஜா போன்ற படங்களைக் இயக்கி கவனிக்க வைத்தவர் நித்திலன் சாமிநாதன். அதிலும் மகாராஜா படம் மூலம் விஜய் சேதுபதிக்கு முதல் ரூ.100 கோடி வசூலை பெற்று தந்தார். இவரின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சமீபத்தில் நித்திலன் அளித்த பேட்டி ஒன்றில், “மகாராஜா படத்தின் கதையை முதலில் சாந்தனுவிடம் சொல்லி இருந்தேன். அவர் இந்தக் கதையில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். என்னை பல தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் செல்வார். ஆனால், அவர்களுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அப்புறம் அந்தக் கதையை கைவிட்டு வேறு ஒரு கதையை எழுதினேன். அதுதான் 'குரங்கு பொம்மை' என கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து நெட்டிசன்கள் சாந்தனுவை 'சுப்ரமணியபுரம்', 'பாய்ஸ்', 'காதல்', 'களவாணி' போன்ற தனக்கு வந்த நல்ல படங்களை தவறவிட்டது போன்று மகாராஜா படத்தையும் அவர் தவறவிட்டுவிட்டதாக கருத்து பதிவிட்டு வந்தனர்.
இதுபற்றி சாந்தனு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “முதலில் 'மகாராஜா' படம் உருவானது எனக்கு மகிழ்ச்சி. நித்திலன் உலகளவில் கவனம் பெற்று வருகிறார். அந்த சமயத்தில் நான் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறேன் என்ற நிறைவை எனக்கு தருகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் என்னை குறிப்பிட்டது மகிழ்ச்சி. இந்தக் கதை நிராகரிக்கப்பட்டதற்கு எனக்கோ என் அப்பாவுக்கோ எந்த தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நித்திலன் என்னிடம் பேசியதே என் அப்பாவுக்கு தெரியாது. அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை. ஆனால் இன்றைக்கு 'கதைதான் ராஜா' என்று நிரூபணம் ஆகியுள்ளது. நான் எப்போதும் நல்ல கதைகளில் பணிபுரிவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எல்லாரும் சொல்வதைப் போல காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்” என பதிவிட்டிருந்தார்.
404 days ago
404 days ago
404 days ago