இரட்டையர்களுக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பு
ADDED : 415 days ago
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன் கதாநாயகி என்கிற ரியாலிட்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், ரூபினா, ரூபிஸீனா என்கிற இரட்டை சகோதரிகள் ஜோடியாக கலந்து கொண்டு ஜோடியாகவே டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றனர். இதனையடுத்து துடிக்கும் கரங்கள் படத்தின் இயக்குநரான வேலுதாஸ் படத்திலும் ரூபினா, ரூபிஸீனா நடித்தனர். இந்நிலையில், இந்த இரட்டை சகோதரிகளுக்கு தற்போது மலையாள சீரியலில் ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து ரூபினா, ரூபிஸீனாவிற்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.