உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிகாரிகா - ரஞ்சித் ஜோடிக்கு பெண் குழந்தை

நிகாரிகா - ரஞ்சித் ஜோடிக்கு பெண் குழந்தை

சின்னத்திரை நடிகையான நிஹாரிகா வேலைக்காரன், ராஜா ராணி 2, இதயத்தை திருடாதே ஆகிய தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். இவர் சின்னத்திரை இயக்குநரான ரஞ்சித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த ஜோடிக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இனிப்பான செய்தியை தன் மகளின் பிஞ்சு பாதங்களின் புகைப்படத்துடன் ரஞ்சித் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித் - நிகாரிகா ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !