உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தோழிகளுடன் ரீயூனியன் : சந்தோஷத்தை மீட்டெடுத்த அனிதா சம்பத்

தோழிகளுடன் ரீயூனியன் : சந்தோஷத்தை மீட்டெடுத்த அனிதா சம்பத்

சின்னத்திரை செய்திவாசிப்பாளர், தொகுப்பாளர், நடிகை என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிதா சம்பத். இவர் தனது தோழிகளுடன் அண்மையில் ரீ-யூனியன் மீட்டிங்கில் சந்தித்துள்ளார். அப்போது பம்பு செட்டு குளியல், மண் சட்டி சமையல் என பால்யகால நினைவை மீட்டெடுத்துள்ள அவர் சோஷியல் மீடியாவில் அதை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா? என்பதை இந்த வீடியோவை எடிட் செய்யும் போது தான் தெரிந்தது. நான் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுத்து தந்த தோழிகளுக்கு நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !