புதிய படத்தில் ‛காற்றுக்கென்ன வேலி' பிரியங்கா
ADDED : 427 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார் பிரியங்கா. இந்த தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரியங்கா மற்றொருபுறம் தெலுங்கில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். அதையும் தாண்டி இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்காகவே பலரும் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில், பிரியங்கா தற்போது மீண்டும் கன்னடத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியிருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ள பிரியங்கா தனக்கு வாய்ப்பளித்த குழுவினருக்கும் ஆதரவாக இருந்து வரும் ரசிகர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.