சின்னி ஜெயந்த் மகன் திருமணம் : முதல்வர் நேரில் வாழ்த்து
ADDED : 412 days ago
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஷ்ருதன் ஜெய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவில் தேர்வில் இந்திய அளவில் 13வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார். தற்போது விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோபிநாத் இஞ்செட்டி - ஜானகி தம்பதியின் மகள் மானஸ்வினிக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், உதயநிதி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். கலை உலகில் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.