மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
374 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
374 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
374 days ago
நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரை மனதில் வைத்து பல இயக்குனர்கள் தங்கள் படங்களின் கதைகளை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் 'புட்டேஜ்' என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் படத்தொகுப்பாளராக இருந்து இயக்குனராக இந்த படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படத்திற்கான கதையை ஷப்னா முகமது எழுதியுள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ள மர்மம் நிறைந்த அந்த கதாபாத்திரம் முதலில் ஒரு ஆணை மனதில் வைத்து தான் எழுதப்பட்டதாம். அதன்பிறகு ஏன் இதை ஒரு பெண்ணாக மாற்றக்கூடாது என யோசித்த ஷைஜு ஸ்ரீதரன், மஞ்சு வாரியர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பி அதற்காக திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் தன்னை வெகுவாக ஈர்த்ததாலேயே இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் மஞ்சு வாரியர் தன்னை இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
374 days ago
374 days ago
374 days ago