உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீஜே அஞ்சனாவுக்கு என்னாச்சு?

வீஜே அஞ்சனாவுக்கு என்னாச்சு?

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் அதிக ரசிகர்களை பெற்று புகழ் பெற்றவர்களில் வீஜே அஞ்சனாவும் ஒருவர். அண்மையில் கிளாமர் போட்டோஷூட்டுகளிலும் இறங்கி கலக்கி வந்தார். சில தினங்களுக்கு முன் வீட்டிலேயே கீழே விழுந்ததில் வலது கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஞ்சனா, இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், 'சர்ஜரிக்கு பின் மனதளவில் தளர்ந்துவிட்டேன். கை குணமாக குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும். காயம் குணமாக குறைந்தது ஒருவருடம் ஆகிவிடும். முழுவதுமாக உடைந்துவிட்டேன். இருந்தாலும் இட்ஸ் ஓகே. இது முடிவல்ல என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டிருக்கிறேன் ' என்று பதிவிட்டிருந்தார்.

இதைபார்க்கும் ரசிகர்கள் அவர் சீக்கிரமே குணமாக வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !