விஜய் கட்சியின் முதல் மாநாடு செப்., 23ல் விக்கிரவாண்டியில் நடக்கிறது
ADDED : 411 days ago
தி கோட் படத்தில் நடித்து முடித்திருக்க்கிறார் விஜய். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க உள்ளார். சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் தேடி வந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி ஒரு கடிதம் கொடுத்துள்ளார். இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.