கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகர் சம்பத் ராம்
ADDED : 411 days ago
ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சம்பத் ராம். அதன் பிறகு வல்லரசு, தீனா, ரமணா, திருப்பாச்சி, தங்கலான் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று சம்பத்ராம், சென்னையில் உள்ள கிண்டியில் தனது காரை ஓட்டி சென்ற போது பின்புறமாக வந்த லாரி அவரது காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் காரின் பின்பகுதி அப்பளம் போல் நொறுங்கி உள்ளது. இந்த விபத்தில் நடிகர் சம்பத் நான் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.