தனுஷை இயக்கும் மகாராஜா பட இயக்குனர்?
ADDED : 460 days ago
குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். சமீபத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் ரூ. 100 கோடி வசூலைக் குவித்தது.
இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு நித்திலன் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இவர் நயன்தாராவை வைத்து அடுத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நித்திலன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்த கதை தனுஷூக்கு பிடித்துள்ளதாக அடுத்த கட்டத்திற்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.