உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் ஸ்ரேயா

முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா சரண் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரேயா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரேயா நடனமாடுகிறாராம். இதன் மூலம் முதன்முறையாக சூர்யா படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !