உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மகேந்திரனின் நாடக கதையில் நடித்த சிவாஜி

பிளாஷ்பேக்: மகேந்திரனின் நாடக கதையில் நடித்த சிவாஜி

உதிரிபூக்கள், முள்ளும் மலரும் போன்ற உயர்ந்த படைப்புகளை தந்த மகேந்திரன் அடிப்படையில் எழுத்தாளர். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை, கங்கா, திருடி, தங்கபதக்கம் உள்ளிட்ட பல படங்களின் கதை இவருடையது. அந்த வரிசையில் மகேந்திரன் எழுதிய நாடகம்தான் 'ரிஷி மூலம்'. சென்னை மேடையில் நடத்தப்பட்டு வந்த இந்த நாடகத்தை எஸ்.பி.முத்துராமன் அதே பெயரில் படமாக இயக்கினார்.

பல வருடங்கள் பிரிந்து வாழும் கணவன், மனைவியை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைப்பது மாதிரியான கதை. இதில் கணவனாக சிவாஜியும், மனைவியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். 1980ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 100 நாளை கடந்து ஓடியது. 100வது நாளில் படத்தின் தயாரிப்பாளர் சிவாஜிக்கு வைர மோதிரம் பரிசளித்தார்.

15 வருடங்களுக்கு பிறகு கணவனும், மனைவியும் சந்தித்து கொள்ளும் வசனமே இல்லாத 5 நிமிட காட்சி இன்றளவுக்கும் பேசப்படுகிறது. வெறும் முக பாவத்திலேயே அன்பு, காதல், பிரிவு, சோகம், மகிழ்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருப்பார்கள் சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !