பிக்கல் பால் விளையாடிய சமந்தா
ADDED : 407 days ago
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்த சமந்தா, அதையடுத்து மயோசிடிஸ் நோய்க்காக ஓராண்டு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தவர், தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடித்துள்ளார். புதிதாக எந்த படங்களிலும் தற்போது அவர் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஜய்யின் 69வது படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பிக்கல் பால் லீக்கில் பங்குபெறும் சென்னை அணியை வாங்கி இருக்கிறார் சமந்தா. அதோடு தானும் பிக்கல் பால் விளையாடி இருக்கிறார். பிங்க் நிற உடையணிந்து சமந்தா விளையாடிய அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த போட்டோக்களில் முன்பை விட வெயிட் குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார் சமந்தா.