உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நாகர்ஜூனா

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நாகர்ஜூனா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. நேற்று தயாரிப்பு நிறுவனம் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் கதாபாத்திரங்களை அறிவிக்க துவங்கினர்.

முதலாவதாக மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் சவுபின் சாஹிர் இணைந்ததாக அறிவித்தனர். தொடர்ந்து இன்று தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனா இணைந்ததாக அவரது பிறந்த நாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இதில் அவர் சைமன் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !