உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி கோட்' அனைத்து வேலைகளும் நிறைவு…

'தி கோட்' அனைத்து வேலைகளும் நிறைவு…

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள படம் 'தி கோட்'. இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிட்டது.

“எல்லா காலத்திலும் சிறந்தது… கடைசி சவுண்ட் மிக்சிங் முடிந்தது… நன்றி..” எனக் குறிப்பிட்டு அதற்காக பணி செய்த தனது தம்பி பிரேம்ஜி, உதவி இயக்குனர், சவுண்ட் மிக்சிங் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.

'தி கோட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காதது மட்டும்தான் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குறையாக உள்ளது. மற்றபடி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. வெளியீட்டிற்கு முன்பாக கடைசி கொண்டாட்டமாக நாளை ஆகஸ்ட் 31ம் தேதி, இசையமைப்பாளர் யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் நான்காவது சிங்கிள் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !