உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் கூலி படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் அமீர்கான்

ரஜினியின் கூலி படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் அமீர்கான்

வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாகிர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் ஒரு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ரஜினியின் வேட்டையன் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ள நிலையில், அடுத்து கூலி படத்தில் இன்னொரு பாலிவுட் நடிகரான அமீர்கான் நடிக்கப்போகிறார். தற்போது கூலி படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் அமீர்கான் இப்படத்தில் நடிப்பதையும் உறுதிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து எல்சியூ படங்களாக இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ், இந்த கூலி படத்தை ரஜினிகென்று தனிக்கதை உருவாக்கி இயக்கி வருகிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !