திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஹன்சிகா
ADDED : 481 days ago
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்த ஹிந்தி நடிகை ஹன்சிகா மோத்வானி, அதையடுத்து வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே என பல படங்களில் நடித்தார். கடந்த 2022ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் ரவுடி பேபி, காந்தாரி போன்ற படங்கள் இருக்கும் நிலையில், நிஷா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான ஹன்சிகா, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஹன்சிகாவுடன் அவரது தாயார் மட்டுமே இருக்கும் நிலையில் அவரது கணவர் இடம்பெறவில்லை.