குட் பேட் அக்லியிலும் அஜித்துடன் இணையும் திரிஷா
ADDED : 369 days ago
லியோ படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஒரு பாடலில் அவருடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் திரிஷா. அதேபோல் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடா முயற்சி படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா, அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் தற்போது இணைந்துள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும்போது அஜித் உடன் திரிஷாவும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன.