விசில் போடு பாடலில் உள்ள ட்விஸ்ட்
ADDED : 443 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி தற்போது படக்குழு சமந்தபட்டவர்கள் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதில் வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, இந்த படத்தின் ஓப்பனிங் பாடலாக விசில் போடு பாடல் இடம் பெற்றுள்ளது. ஆனால், நீங்கள், பார்த்தது போல் இப்பாடல் இடம் பெறவில்லை. விசில் போடு மற்றொரு வெர்ஷன் தான் திரையில் வரும் என தெரிவித்துள்ளார்.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பாடலில் இருக்க போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.