'எல்லா சினி துறையிலும் ஹேமா கமிட்டி வரணும்' - நிவேதா தாமஸ்
ADDED : 396 days ago
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பட்டியலிட்டு வருவதால் அந்த சினிமாவே கதி கலங்கி உள்ளது.
இதுபற்றி நடிகை நிவேதா தாமஸ் கூறுகையில், ‛‛ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. சினிமாவில் பெண்கள் வீட்டில் இருப்பதை விட வேலை செய்யும் இடத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். எனவே வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மலையாள சினிமாவை போல் மற்ற சினிமா துறையிலும் ஹேமா கமிஷன் வர வேண்டும்'' என்கிறார்.