வந்தாச்சு புது பிக்பாஸ் : கமலுக்கு பதில் விஜய் சேதுபதி
ADDED : 410 days ago
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த வருடம் நடக்க வேண்டிய 8வது சீசனைத் தொகுத்து வழங்கப் போவதில்லை என அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவருக்குப் பதிலாக யார் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என அதன் பின் பல பெயர்கள் அடிபட்டது.
நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வந்துள்ளது. இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம், ‛வந்தாச்சு புது பிக்பாஸ்' என்ற அறிவிப்போடு விஜய் சேதுபதி தோன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளதால் அதன் அடிப்படையில் இவர் தேர்வாகி உள்ளார். விரைவில் இந்நிகழ்ச்சி துவங்க உள்ளது.