உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பத்துடன் தி கோட் படம் பார்த்த விஜய்

குடும்பத்துடன் தி கோட் படம் பார்த்த விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 68வது படமான கோட் இன்று உலகமெங்கும் திரைக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். உலகம் முழுக்க ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது கோட் படத்தை நேற்று இரவு சென்னை அடையாறில் உள்ள தியேட்டரில் தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார் விஜய். அப்போது வெங்கட் பிரபு மற்றும் கோட் படக் குழுவினரும் அவர்களுடன் கோட் படத்தை பார்த்துள்ளார்கள். படத்தை பார்த்த பின் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினரையும் விஜய் வாழ்த்தி உள்ளார்

ரசிகர்களுடன் படம் பார்த்த திரைப்பிரபலங்கள்
கோட் படத்தை நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வைபவ், இசையமைப்பாளர் யுவன், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் சென்னை, கோவை உள்ளிட்ட வெவ்வேறு ஊர்களில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !