படப்பிடிப்பில் சமந்தாவுக்கு காயம்
ADDED : 397 days ago
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு ஓராண்டாக மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டு வந்த சமந்தா, தற்போது சிட்டாடல் வெப்சிரீஸில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இந்த தொடர் அமேசானில் வெளியாக உள்ளது . இந்த நிலையில் தற்போது இணைய பக்கத்தில் தனது கால் முட்டியில் அடிபட்டு காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் சமந்தா. அதோடு, காயங்கள் இல்லாமல் ஆக்ஷன் ஸ்டார் ஆக முடியாதா? என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு வைத்து பார்க்கும்போது படப்பிடிப்பில் ஆக்ஷ்ன் காட்சியில் நடித்தபோது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது.