தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்
ADDED : 400 days ago
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வந்தவர், கார்த்தி நடித்த 'விருமன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா' என்ற படத்தில், அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதிதி பாடகியும்கூட.
இந்நிலையில், பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தின் மூலம் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத்தில் தொடங்குகிறது. அதிதிக்கு தெலுங்கில் சரளமாக பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.